
கோயம்பேடு அருகே அமைந்துள்ள பிரபலமான வி.ஆர்.மாலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!
சென்னை கோயம்பேடு அருகே அமைந்துள்ளது பிரபலமான வி.ஆர்.மால். இந்த மாலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்துச் செல்கின்றனர். திரையரங்குகள், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் கடைகள், சிறுவர், சிறுமிகளுக்கான பொழுதுப்போக்கு அம்சங்களுடன் அமைந்துள்ளது. இந்த மாலுக்கு மர்மநபர்கள் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து, திருமங்கலம் காவல்துறையினருக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்களும், 2 மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு வி.ஆர். மால் முழுவதும் சோதனை செய்து வருகின்றனர்.
கனமழையால் கடும் சிரமத்தை எதிர்க்கொள்ளும் துபாய் மக்கள்!
மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடைபெறுவதைக் கண்ட பொதுமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர். மாலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் திருமங்கலம், அண்ணாநகர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.