Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

-

இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு..... மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை தொடரும்.... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இந்த நிலையில் செங்கல்பட்டு , திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் காலை 10 மணிவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

MUST READ