Homeசெய்திகள்தமிழ்நாடுஆண் நண்பரிடம் பேசுவதை கணவர் நிறுத்த சொன்னதால் மனைவி தற்கொலை

ஆண் நண்பரிடம் பேசுவதை கணவர் நிறுத்த சொன்னதால் மனைவி தற்கொலை

-

- Advertisement -

ஆண் நண்பரிடம் பேசுவதை நிறுத்தி கொள்ளுமாறு கணவர் கண்டித்ததால், மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

death

we-r-hiring

சென்னை அண்ணா நகர் மூவேந்தர் நகர் 7வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி புவனேஷ்வரி. இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அண்ணாநகர் எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த ஒரு நபருடன் புவனேஷ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். மேலும் புவனேஷ்வரி வீட்டில் அடிக்கடி செல்போனில் தனது ஆண் நண்பருடன் பேசி வருவதை பார்த்து ஆத்திரமடைந்த கணவர் சுரேஷ், ஆண் நண்பருடன் பேசுவதை நிறுத்தி கொள்ளுமாறு பல முறை கண்டித்துள்ளார்.

இதேபோல் நேற்றிரவும் தனது ஆண் நண்பரிடம் புவனேஷ்வரி பேசி வந்த போது பிரச்சனை ஏற்பட்டு கணவர் சுரேஷ் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த புவனேஷ்வரி, இன்று அதிகாலை 3 மணியளவில் அனைவரும் உறங்கிய பிறகு, வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணைய் உடலில் ஊற்றி தீக்குளித்தார். புவனேஷ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தோர் தீயை அணைத்து படுகாயமடைந்த புவனேஷ்வரியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 50% தீக்காயமடைந்த புவனேஷ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ