spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"மகளிர் இடஒதுக்கீடு சட்டம் உடனடியாக அமலுக்கு வர வேண்டும்"- பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!

“மகளிர் இடஒதுக்கீடு சட்டம் உடனடியாக அமலுக்கு வர வேண்டும்”- பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!

-

- Advertisement -

 

"மகளிர் இடஒதுக்கீடு சட்டம் உடனடியாக அமலுக்கு வர வேண்டும்"- பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!
Photo: DMK

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் இன்று (அக்.14) மாலை 06.00 மணிக்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

we-r-hiring

“பாலின சமத்துவத்துக்கு போராடியவர் கருணாநிதி”- சோனியா காந்தி புகழாரம்!

மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “மாற்றத்திற்கான சரியான தளத்தில் இப்போது நாம் அனைவரும் நின்றுக் கொண்டிருக்கிறோம். முழுமையான சமத்துவத்தைப் பெற நாம் இன்னும் உழைக்க வேண்டும். நீங்கள் தான் என் தாய், நீங்கள் தான் என் சகோதரி; இங்கே இருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

இஸ்ரேலில் இருந்து இதுவரை 49 தமிழர்கள் தாயகம் திரும்பினர் – அமைச்சர் தகவல்

பெண்கள் ஏன் அடிமையாகவே இருக்கிறார் என்ற பெரியாரின் கேள்வி தற்போது நீடிக்கிறது. சமூக மாற்றத்திற்கான புரட்சி இங்கே தான் உருவானது. இனியும் நேரத்தை வீணடிக்க முடியாது; மகளிர் இடஒதுக்கீடு சட்டம் உடனடியாக அமலுக்கு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ