Homeசெய்திகள்தமிழ்நாடுவிபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கனிமொழி எம்.பி.!

விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கனிமொழி எம்.பி.!

-

- Advertisement -

 

விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கனிமொழி எம்.பி.!

கோவையில் விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவரை மீட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

கோலிவுட் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு… 96 படம் மறுவெளியீடு…

கோவையில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்றுக் கொண்டிருந்த போது, அவிநாசி சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் சிக்கியிருந்த கல்லூரி மாணவரை மீட்க செய்த தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளரும், தி.மு.க.வின் நாடாளுமன்ற மக்களவைக் குழு துணைத் தலைவருமான கனிமொழி, அவரை நிர்வாகியின் வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இது தொடர்பான வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

சுகுமாரியாக திவ்யபாரதி… தி கோட் படப்பிடிப்பு புகைப்படம் வைரல்…

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்குழு கனிமொழி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அக்குழு கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு திரும்பும் வழியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ