Homeசெய்திகள்தெலங்கானாவில் லாரி டயரில் கர்ப்பிணி பெண்னை அழைத்து சென்ற கிராம மக்கள்

தெலங்கானாவில் லாரி டயரில் கர்ப்பிணி பெண்னை அழைத்து சென்ற கிராம மக்கள்

-

தெலங்கானாவில் கரைபுரண்டு ஓடும் ஆற்று ஓடை நீரில் லாரி டயரில் கர்பிணி பெண்னை அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கிராம மக்கள்

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏதூர் நகரம் மண்டலம் எலிசெட்டி பெல்லி கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி சுனிதாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என முடிவு செய்தனர். ஆனால் ஊரை ஒட்டி அமைந்துள்ள ஜம்பன்னா ஆற்று ஓடையில் வெள்ளநீர் கரைபுரண்டு செல்வதால் எவ்வாறு அழைத்து செல்வது என தெரியாமல் அனைவரும் புலம்பி வந்தனர். பின்னர் கிராமத்தை சேர்ந்த நீச்சல் தெரிந்த இளைஞர்கள் சுனிதாவை எப்படியாவது மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என முடிவு செய்தனர். இதற்காக லாரி டயரின் மேல் ஒருகட்டையை வைத்து அதற்கு மேல்  சுனிதாவை  அமர வைத்து இளைஞர்கள் சுற்றி பாதுகாப்பாக நடந்து ஓடையைக்  கடந்து சென்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

தெலங்கானாவில் லாரி டயரில் கர்ப்பிணி பெண்னை அழைத்து சென்ற கிராம மக்கள்

 

மழை காலங்களில் தங்கள் ஊர் துண்டிக்கப்படுவதாகவும் எனவே ஓடைக்கு இடையே கடந்து செல்ல எங்கள் கிராமத்திற்கு பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ