spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்24 மணிநேரம், 8008 புல் அப்ஸ்: கின்னஸ் சாதனை

24 மணிநேரம், 8008 புல் அப்ஸ்: கின்னஸ் சாதனை

-

- Advertisement -

24 மணிநேரம், 8008 புல் அப்ஸ்: கின்னஸ் சாதனை

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர் 24 மணி நேரத்தில் 8,008 முறை புல் அப்ஸ்களை எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

சமீப காலமாக உடற்பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடல்நலனை காக்க வேண்டுமென்றால் உடற்பயிற்சி என்பது அவசியமாகிறது.

we-r-hiring

இந்நிலையில் ஜாக்சன் இட்டாலியானோ என்ற உடற்பயிற்சி ஆர்வலர் தான் நடத்தி வரும் தொண்டு நிறுவனத்திற்காக நிதி திரட்ட திட்டமிட்டார்.

அதன்படி 24 மணிநேரத்தில் 8,008 முறை புல் அப்ஸ்களை எடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.

இந்த சாதனை மூலம் ஜாக்சன் இட்டாலியானோவுக்கு இந்திய மதிப்பில் 4லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் 7,715 புல் அப்ஸ்களே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ