- Advertisement -
மியான்மரில் மலைப்பாம்புகளை பிடிக்கும் இளம் பெண்
மியான்மரில் இளம் பெண் ஒருவர் தனது குழுவினரோடு இணைந்து மலைப்பாம்புகளை கோணிப்பையில் அடைத்து வனப்பகுதியில் விடும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
![]()
ஷ்வே லீ என்ற பெண் தனது குழுவினருடன் இணைந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் பாம்புகளை மீட்கும் பணியை செய்து வருகிறார்.
பாம்புகளின் ராணி என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் ஷ்வே லீ அழைப்பு வந்தவுடன் தனது குழுவினருடன் சென்று மலைப் பாம்புகளை சர்வசாதாரணமாக பிடித்து கோணிப்பையில் அடித்துக் கொண்டு செல்கிறார்.


கடந்த ஆண்டு மட்டும் 200 பாம்புகளைப் பிடித்துள்ள ஷ்வே லீயின் குழு பாம்புகளை தங்கள் சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்று பின்னர் வனப்பகுதியில் விடுகின்றனர்.
மலைப்பாம்புகள் மட்டுமின்றி கொடிய விஷமுள்ள ராஜ நாகம், கட்டுவிரியன் உள்ளிட்ட பாம்புகளையும் அனாயசமாக பிடிக்கும் இவரது குழுவுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது.


