Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் அதிர்ச்சி..மூளையை திண்ணும் அமீபா..

அமெரிக்காவில் அதிர்ச்சி..மூளையை திண்ணும் அமீபா..

-

அமெரிக்காவில் மூளையை திண்ணும் அமீபாவிற்கு 2 வயது குழந்தை பலியானது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நெவேடா மகாணத்தின் அஷ் ஸ்பிரிங்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் பிரைனா.இவருக்கு 2 வயதில் உட்ரோ பண்டி மகன் உள்ளார். உட்ரோ பண்டி கடந்த சில நாட்களாக அங்குள்ள நீர்நிலைகளில் விளையாடியுள்ளான். ஆதலால் அவனுக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது.தண்ணீரில் விளையாடியதால் தான் காய்ச்சல் என பெற்றோர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் சிறுவன் அதீக காய்ச்சல்,தலைவலி,மற்றும் கழுத்தை அசைக்க முடியாமை போன்றவற்றால்  உடல் மிகவும் மோசமானதால் மருத்துவமனையில் சேர்த்தனர்.அவனை பரிசோதித்த மருத்துவர்கள் மூலைக்காய்ச்சல் என சிகிச்சையை தொடங்கியுள்ளனர்.பின்னர் தான்  அச்சிறுவன் ‘மூளையை உண்ணும் அமீபா’ என்ற நோயால் பாதிப்படைந்தது தெரியவந்தது.

மூளையை உண்ணும் அமீபா என்பது ஏரி, குளங்கள் மற்றும் ஆறுகளில்  குளிக்கும் போது  நீர்நிலைகளில் காணப்படும் அமீபாவனது மூக்கின் வழியே மனித உடலில் நுழைந்து மூளையை கொஞ்சம் கொஞ்சமாக  செயலிழக்கச்  செய்து இறுதியில் மரணத்தையே ஏற்படுத்திவிடும்.இந்த அமீபா  உடலுக்குள் சென்ற முதல் நாளிலேயே அதற்கான அறிகுறியை காட்டிவிடுமாம்.இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு 18 நாட்களுக்குள் மரணத்தை ஏற்படுத்திவிடுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 50 வயது நபர் ஒருவர் இந்நோயால் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளார்.மேலும் இந்நோயால் சிறுவன் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நோய் ஏற்பட்டவர்கள் 100 சதவீதம் மரணத்தையே அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ