Homeசெய்திகள்உலகம்நைஜீரியாவில் தீ விபத்து; 12 பேர் பலி

நைஜீரியாவில் தீ விபத்து; 12 பேர் பலி

-

நைஜீரியாவில் தீ விபத்து; 12 பேர் பலி

நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருடியபோது ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நைஜீரியாவில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்களில் இருந்து சட்டவிரோதமாக எண்ணெய்யைத் திருடி வெளிச்சந்தையில் விற்பது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் எமோஹ்வாவில் உள்ள ஷெல் நிறுவனத்திற்கு சொந்தமான குழாயில், சிலர் கச்சா எண்ணெய்யைத் திருட முயற்சித்தபோது, வெடிவிபத்து ஏற்பட்டு தீ மளமளவென பரவியது. விபத்தில் 12 பேர் பலியான நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ