spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்இந்தியாவுடன் உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் கனடா பிரதமர் நவராத்திரி வாழ்த்து!

இந்தியாவுடன் உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் கனடா பிரதமர் நவராத்திரி வாழ்த்து!

-

- Advertisement -

 

இந்தியா மீது கனடா வைக்கும் குற்றச்சாட்டின் பின்னணியில் உளவு தகவல்!
File Photo

நவராத்திரியைக் கொண்டாடும் இந்துக்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடா பிரதமரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை அவர் வெளியிட்டுள்ளார்.

we-r-hiring

ஓலா, உபர் உள்ளிட்ட வாகனங்கள் ஸ்டிரைக்!

அதில், ஹாப்பி நவராத்திரி; இந்து சமூகத்தினருக்கும், நவராத்திரியைக் கொண்டாடும் மற்றவர்களுக்கும் இனிய வாழ்த்துகள் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். எருது முகம் கொண்ட மகிஷாசூரனை, துர்கா வெற்றிக் கொண்டதைக் கொண்டாடும் நவராத்திரி திருவிழா இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும் என்று கூறியுள்ள கனடா பிரதமர், அனைவரும் ஒன்று கூடி கொண்டாடி மகிழும் நிகழ்வுகளைக் கண்டு மகிழ்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நூற்றாண்டுகளைக் கடந்த பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், பிரார்த்தனைகள், நடனங்கள், சிறப்பு உணவுகள் மற்றும் வாணவேடிக்கைகள் நவராத்திரியின் சிறப்பம்சங்கள் என்றும், கனடா பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடந்த ஜூன் 18- ஆம் தேதி காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கனடாவில் கொலைச் செய்யப்பட்டதில், இந்தியாவின் பங்கு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதில் இருந்து இரண்டு நாடுகள் இடையே உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், கனடா பிரதமர் நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

MUST READ