Homeசெய்திகள்உலகம்திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!

திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!

-

சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.

திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!

இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய தயங்குவது போன்றவற்றால் இளைஞர்கள் திருமணத்தை தள்ளிப்போடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சீனாவின் திருமண விகிதம் 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என்று சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் திருமணங்கள் 3.43 மில்லியனாகக் குறைந்துள்ளன. இரண்டாவது காலாண்டில் 1.46 மில்லியன் திருமணங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!

தரவுகளின்படி, இந்த போக்கு தொடர்ந்தால், மொத்த திருமணங்களின் எண்ணிக்கை 2024 இல் 6.5 மில்லியனுக்கும் கீழே குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அழுத்தங்கள், மாறிவரும் சமூக நெறிமுறைகள் மற்றும் பெரு நகரங்களில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதே சரிவுக்குக் காரணம்.

அமெரிக்காவில் நடந்த உலக அழகி போட்டியில் தாய், மகள் வெற்றி

பல ஆண்டுகளாக விவாகரத்துகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால் சீனாவில் மொத்த விவாகரத்துகளின் எண்ணிக்கை 2019 இல் 4.043 மில்லியனாக உயர்ந்தது, 2023 இல் 2.6 மில்லியனாகக் குறைந்தது.

திருமணம் மற்றும் பிரசவத்தை ஊக்குவிக்க அரசாங்கம் முயற்சி செய்தாலும், சீனர்களின் மனதை மாற்றவில்லை என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ