- Advertisement -
பெட்ரோல் நிலையத்திற்கு திடீர் விசிட் வந்த ‘கோலா கரடி’
ஆஸ்திரேலியாவில், உணவு தேடி அங்குள்ள பெட்ரோல் நிலையத்திற்கு சென்ற கோலா கரடி, வினோத கட்டமைப்பைக் கண்டு திகைத்தது.
ஊழியரின் காலை மரம் என கருதி தாவி பிடித்துக்கொண்டது
கங்காரூவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் அடையாளமாக பாலூட்டி வகையை சேர்ந்த கோலா கரடிகள் உள்ளன. பார்ப்பதற்கு எலி முகத்துடன் கூடிய பொம்மை போல் காட்சியளிக்கும் இந்த வனவிலங்கு, அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டிய இடங்களிலும் சுற்றித் திரிகின்றன. அந்த வகையில் தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலைடு பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு உணவு தேடி கோலா கரடி வந்துள்ளது. சுற்றுமுற்றும் பார்த்ததும் கட்டடத்திற்குள் நுழைந்த கோலா கரடி, அங்கிருந்த ஊழியரின் காலை மரம் என நினைத்து தாவிக்கொண்டது.

வினோத கட்டமைப்பை பார்த்தபடி உலா வந்த ‘கோலா கரடி’
இருப்பினும் நிலையத்தை விட்டு வெளியேறாத கோலா கரடி, வனத்துறையினர் வரும் வரை சுமார் 40 நிமிடங்கள் அங்கேயே சுற்றித்திரிந்திருக்கிறது. இதன் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கின்றன.