கரும்பு லாரியை வழிமறித்த யானை: வீடியோ வைரல்!
கம்போடியாவில் கரும்பு லாரியை யானை வழிமறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வனவிலங்குகள் உணவு தேடி காடுகளை விட்டு மக்களின் இருப்பிடங்களுக்கும், நெடுஞ்சாலைகளுக்கும் வருவதுண்டு.
இந்நிலையில் கம்போடியா நாட்டில் வனப்பகுதியை ஒட்டிய சாலையின் ஓரமாக யானை ஒன்று நின்று கொண்டிருக்கிறது. அந்த யானை அந்த வழியாக சென்று கொண்டிருந்த பல வாகனங்களை தொந்தரவு செய்யாத நிலையில், கரும்புகளை ஏற்றிச் சென்ற லாரியை வழிமறித்தது.

ஓட்டுனர் லாரியை நிறுத்திய பிறகு லாரியில் இருந்து தனக்கு தேவையான கரும்புகளை எடுத்துக் கொண்ட யானை, வண்டியை நகர அனுமதிக்கிறது. இதனால் அச்சமடைந்த ஓட்டுனர் வாகனத்தை அங்கிருந்து இயக்கி தப்பித்து சென்றார்.
In Cambodia and Thailand, elephants have developed the ability to take advantage of their right of way by stopping sugar cane trucks in order to snatch a quick snack
[read more 1: https://t.co/al8BC5qdU9]
[read more 2: https://t.co/SIRMWawpRz]pic.twitter.com/5gxzhtjC2k— Massimo (@Rainmaker1973) March 6, 2023
பின்னர் யானை கரும்புகளை மெய்மறந்து ரசித்து ருசித்து சாப்பிடுகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.