Homeசெய்திகள்உலகம்ஹமாஸ் குழுவினரை அழிக்க சிறப்புப் படையை உருவாக்கிய இஸ்ரேல்!

ஹமாஸ் குழுவினரை அழிக்க சிறப்புப் படையை உருவாக்கிய இஸ்ரேல்!

-

- Advertisement -

 

இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,000-யைக் கடந்தது!
File Photo

ஹமாஸ் குழுவினரை அழிக்க இஸ்ரேல், சிறப்புப் படையை உருவாக்கியுள்ளது.

“இந்தியா கூட்டணி இந்தியாவை மீட்கும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

கடந்த அக்டோபர் 07- ஆம் தேதி அன்று இஸ்ரேலுக்குள் ஊடுருவியும், ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசியும் மிகப்பெரிய தாக்குதலை ஹமாஸ் குழு நடத்தியது. இதையடுத்து, காசாவில் உள்ள ஹமாஸ் குழுவினர் மற்றும் அந்த குழுவின் தலைவர், நிர்வாகிகள் இருக்கும் இடங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரி தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் போரால் 3,000- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் முதலுதவி சிகிச்சைகளை அளித்து, படுக்கைகள் காலியாக உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வருகிறது.

இந்த சூழலில், இஸ்ரேல் ராணுவம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க சிறப்புப் படையை உருவாக்கியுள்ளோம். இந்த சிறப்புப் படைக்கு ‘நிலி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சிறப்புப் படை தனித்துச் செயல்படும் என்றும், ஹமாஸ் குழுவினர் தங்கியுள்ள இடங்களைக் கண்டறிந்து அழிக்கும் என்றும், ஹமாஸ் போன்று கொரில்லா தாக்குதல் நடத்தவும் நிலி பிரிவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பில்லூர் நீரேற்றும் நிலைய பணி- தலைமைச் செயலாளர் ஆய்வு!

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் 16வது நாளாக நீடித்து வருகிறது. இதனிடையே, காசாவுக்கு எகிப்து வழியாக இரண்டு விமானங்களில் கூடுதல் நிவாரணப் பொருட்களை அனுப்பியது கத்தார்.

MUST READ