ஹாங்காங்கில் புதிய கட்டடத்தில் பயங்கர தீ விபத்து
ஹாங்காங்கில் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
42 மாடிகள் கொண்ட குடியிருப்புக் கட்டடத்தில் தீ
ஹாங்காங்கில் சிம் ஷா சுயி (TSIM SHA TSUI) நகரில் 42 மாடிகள் கொண்ட குடியிருப்புக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கிய கட்டுமானப் பணி நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், இந்த கட்டிடத்தில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, கட்டுமான பணியில் இருந்த சுமார் 100 தொழிலாளர்கள் அச்சத்துடன் வௌியேறியனர். இவர்களில் படுகாயமடைந்த இரண்டு தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
WATCH | Massive Fire In Under-Construction Hong Kong Skyscraper #Fire #skyscraper #HongKong pic.twitter.com/pNvGtDuCxT
— NewsMobile (@NewsMobileIndia) March 3, 2023
கட்டடத்தின் உச்சியில் இருந்து விழுந்த தீப்பிழம்புகள்
கட்டடத்தில் பற்றி எரிந்த தீயால் அருகே இருந்த கட்டடங்களில் கரும்புகை சூழ்ந்தது. மேலும், கட்டடத்தின் உச்சியில் இருந்து தெருக்களில் விழும் தீப்பிழம்புகளை அங்கிருந்தவர்கள் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வௌியிட்டுள்ளனர். இந்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.