- Advertisement -
பொம்மை… என்றாலே அழகாக இருக்கும், பார்ததும் கொஞ்வ வேண்டும் என்றும் தோன்றும். ஆனால், ஒரு பொம்மை பார்க்கவே மோசமா, அழுக்கா, ரத்த கறையோட இருந்தால் எப்படி இருக்கும்….இந்த மாதிரி அகோரமான பொம்மைகள் நிறைந்த தீவு தான் பொம்மைத் தீவு. இந்த பொம்மைகளுக்கு பின்னாடியும், இந்த தீவுக்கு பின்னாடியும் ஒரு மர்மம் உள்ளது. அது என்னவென்று இந்த கட்டுரையில் காணலாம்….
அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் பக்கத்தில் தான், இந்த விசித்திரமான தீவு உள்ளது. இந்த தீவில் சின்னச் சின்ன வீடு, மரம், செடி என்று பார்க்கும் இடம் அனைத்தும் பொம்மைகளாக தொங்கிக் கொண்டு இருக்கும். கால் மற்றும் கைகள் உடைந்த மாதிரி, ஏன் தலை கூட இல்லாமல் அதிக பொம்மைகள் அத்தீவில் காணப்படுகின்றன. சாதாரண தீவு இப்படி திகில் தீவாக மாறியதற்கு பின்னால் ஒரு கதை உண்டு.
