
ஹமாஸ் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அரசுக்கு உதவும் நோக்கில், தலைநகர் டெல் அவிவ் விமான நிலையத்திற்கு திரும்பிய ராணுவ வீரர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உலகக்கோப்பை- மெட்ரோ கொடுத்த அசத்தல் ஆஃபர்!
ஹமாஸுக்கு எதிரான போரில் நாட்டிற்கு சேவையாற்ற விரும்புபவர்கள் வரும் படி, இஸ்ரேல் அரசு சார்பில், அந்நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையேற்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராணுவ வீரர்கள், இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் விமானம் மூலம் டெல் அவிவ் நகருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
அறிவிப்பு வெளியான 48 மணி நேரத்தில் 3 லட்சம் பேர் முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விமான நிலையத்தில் இஸ்ரேலிய சேர்ந்த இளம்பெண்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
11 நாட்களாக நீடித்த போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!
அப்போது, தங்கள் கைகளில் இஸ்ரேலிய தேசிய கொடிகளை ஏந்திக் கொண்டும், அந்நாட்டின் தேசிய கீதத்தைப் பாடிய படியும் வரவேற்றனர்.