Homeசெய்திகள்உலகம்ஜப்பானில் நிலநடுக்கம்- 57 பேர் உயிரிழப்பு!

ஜப்பானில் நிலநடுக்கம்- 57 பேர் உயிரிழப்பு!

-

- Advertisement -

 

ஜப்பானில் நிலநடுக்கம்- 57 பேர் உயிரிழப்பு!

ஜப்பான் நாட்டின் இஷிகா மற்றும் நிகாகா மாகாணங்களை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.

வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!

நேற்று முன்தினம் (ஜன.01) முதல் 155 முறை அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், அதிகபட்சமாக ரிக்டர் அளவுக்கோலில் 7.6 ஆக பதிவானதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் போது ஆறு முதல் வலுவான அதிர்வுகள் ஏற்பட்டதால் வீடுகள் மற்றும் கட்டிடங்களும் குலுங்கின.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சில இடங்களில் சாலைகளில் விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கடல் பகுதிகளில் 5 மீட்டர் உயரம் வரை ஆழிப்பேரலை தாக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

இருப்பினும், கடலோரப் பகுதி மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் 33,000- க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டுள்ளது.

டிசம்பரில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூபாய் 1.64 லட்சம் கோடி!

இந்த நிலையில், தற்போது வரை இடிபாடுகளில் சிக்கி 57 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் உறைபனி நிலவுவதால் வீடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்பதில் கடும் சவாலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சுவதாக அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா கவலைத் தெரிவித்துள்ளார்.

MUST READ