spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்"காசாவின் வடக்குப் பகுதி மக்கள் வெளியேற 3 மணி நேரம் பாதை திறப்பு"- இஸ்ரேல் அறிவிப்பு!

“காசாவின் வடக்குப் பகுதி மக்கள் வெளியேற 3 மணி நேரம் பாதை திறப்பு”- இஸ்ரேல் அறிவிப்பு!

-

- Advertisement -

 

"காசாவின் வடக்குப் பகுதி மக்கள் வெளியேற 3 மணி நேரம் பாதை திறப்பு"- இஸ்ரேல் அறிவிப்பு!
File Photo

காசா பகுதியில் இருந்து மக்கள் வெளியேற வழங்கப்பட்ட கெடு நெருங்கும் நிலையில், வடக்கு பகுதி மக்களின் வசதிக்காக, மூன்று மணி நேரம் பாதையை இஸ்ரேல் திறந்துள்ளது.

we-r-hiring

திருவண்ணாமலை சாலை விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

இஸ்ரேல் முப்படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், காசாவின் வடக்குப் பகுதியில் உள்ள மக்கள் தெற்கு பகுதிக்கு செல்ல மூன்று மணி நேரம் இஸ்ரேல் அவகாசம் வழங்கியுள்ளது. மக்கள் கடந்து செல்ல ஏதுவாக பைட் ஹலோன், கான் யூனிஸ் வழித்தடத்தில் மூன்று மணி நேரத்திற்கு எந்த வித தாக்குதலும் நடத்தப்படாது என்றும் கூறியுள்ளது.

இதனையடுத்து, காசாவின் வடக்குப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றன. அதேபோல், எகிப்து எல்லை வழியாக செல்லவும், ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். எனினும், காசாவில் வசிக்கும் 11 லட்சம் மக்களை ஒரு லட்சம் பேர் கூட இதுவரை வெளியேறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

“மீன்பிடி உரிமையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!

பாலஸ்தீன மக்களை வெளியேற விடாமல், ஹமாஸ் அமைப்பினர் தடுத்து நிறுத்துவதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் படைகளுக்கு உதவும் வகையில், ஆயுதங்களுடன் இரண்டாவது விமானத்தை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

MUST READ