Homeசெய்திகள்உலகம்ரோஜா எண்ணெய் அதிகம் தயாரிக்கும் நாடு...

ரோஜா எண்ணெய் அதிகம் தயாரிக்கும் நாடு…

-

பல்கேரியா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சிகப்பு ரோஜாக்கள் தான்.  இந்நாட்டில் இருந்து தான் அதிக அளவில் ரோஜாப்பூ எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த எண்ணெய் தான் உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் ரோஜா எண்ணையாகும்.

ரோஜா எண்ணெய் அதிகம் தயாரிக்கும் நாடு...பல்கேரியாவின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் ரோஜா உற்பத்தியை அந்நாட்டு மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

ரோஜா எண்ணெய் அதிகம் தயாரிக்கும் நாடு...அங்குள்ள கசான்லாத் பகுதியில் அமைந்துள்ள ரோஜா பள்ளத்தாக்கு பகுதியில் தான் 12,500 ஏக்கர் நிலப்பரப்பில் ரோஜா விவசாயம் நடைபெற்று வருகிறது.

இங்கு அறுவடை தொடங்குவதை ஒட்டி ரோஜாப்பூ திருவிழா நடைபெற்றது. அந்நாட்டின் பாரம்பரிய உடையை அணிந்தபடி விவசாயிகளும் உள்ளூர்வாசிகளும் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.பன்னீர் எப்படி தயாரிக்கப்படுகிறது ரோஜா எண்ணையை உருவாக்கும் முறை உள்ளிட்ட வகை குறித்து இந்த திருவிழாவில் செய்து காட்டப்பட்டது.

திருவிழாவில் கலந்து கொண்ட பெண்கள் ரோஜா பூக்களை வைத்து கிரீடம் செய்து தலையில் வைத்து மகிழ்தனர்.இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.

MUST READ