spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்தங்களுக்கு பிறந்த குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய கொடூர தம்பதி…

தங்களுக்கு பிறந்த குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய கொடூர தம்பதி…

-

- Advertisement -

தங்கள் குழந்தையை 2 லட்சம் ரூபாய்க்கு விற்று ஐபோன் வாங்கிய தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்காள மாநிலம் வடக்கு பர்கானல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்தேஷ் கோஷ்.இவரது  மனைவி ஷதி.இந்த தம்பதிக்கும் ஒரு மகள் உள்ளார்.இதனிடையே, ஷதிக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

we-r-hiring

 

இந்த பெண்குழந்தையை விற்க முடிவு செய்துள்ளனர் பெற்றோர்கள். இந்நிலையில் பிறந்த பெண் குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு பிரியங்கா கோஷ் என்ற பெண்ணிடம் தனது குழந்தையை விற்பனை செய்துள்ளனர்.இந்த சம்பவம் ஒரு மாதத்திற்கு முன் நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விற்பனை செய்ததால் வந்த பணத்தில் ஐபோன்  வாங்கியுள்ளனர். மேலும் மீதியுள்ள பணத்திற்கு இருவரும் ‘ஹனீமூன்’ சென்றுள்ளனர்.டிஹா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாச் சென்றுள்ளனர்.குழந்தை விற்ற பணத்தில் உல்லாசமாக செலவும் செய்துள்ளனர்.தாங்கள் வாங்கிய ஐபோன் மூலம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து விற்பனை செய்யப்பட்ட குழந்தையை மீட்டனர்.குழந்தையை விற்ற பெற்றோர் மற்றும் வாங்கிய பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

MUST READ