spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் பரபரப்பு - முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் பரபரப்பு – முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு

-

- Advertisement -

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

we-r-hiring

அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியா பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அந்த நேரம் மர்ம நபர் ஒருவர் டிரம்ப் மீது திடீரென துப்பாக்கியா சுட்டார். இதில் காது பகுதியில் மட்டும் லேசான காயத்துடன் டிரம்ப் உயிர் தப்பினார். குண்டடி பட்டதும் உடனடியாக சுதாரித்துக் கொண்ட டிரம்ப் தனது முன் இருந்த மைக் மேடையின் கீழே குனிந்து தன்னை தற்காத்துக்கொண்டார். உடனடியாக பாதுகாவலர்கள் அங்கு விரைந்து டிரம்பை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து ரத்தம் சொட்ட சொட்ட அவர் மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அங்கு டிரம்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர் மீது நடத்தப்பட்டுள்ள இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் முன்னதாக அவர் நடத்திய தாக்குதலில் டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ