HomePongal Specialபொங்கல் தின ஸ்பெஷலாக புதிய போஸ்டரை வெளியிட்ட 'ரெட்ரோ' படக்குழு!

பொங்கல் தின ஸ்பெஷலாக புதிய போஸ்டரை வெளியிட்ட ‘ரெட்ரோ’ படக்குழு!

-

- Advertisement -

ரெட்ரோ படக்குழு பொங்கல் தின ஸ்பெஷலாக புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.பொங்கல் தின ஸ்பெஷலாக புதிய போஸ்டரை வெளியிட்ட 'ரெட்ரோ' படக்குழு!

சூர்யாவின் 44 வது திரைப்படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ. இந்த படத்தை பீட்சா , ஜிகர்தண்டா, பேட்ட ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருக்கிறார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து கருணாகரன், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. பொங்கல் தின ஸ்பெஷலாக புதிய போஸ்டரை வெளியிட்ட 'ரெட்ரோ' படக்குழு!அதைத் தொடர்ந்து இப்படமானது 2025 மே 1 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இன்று (ஜனவரி 14) பொங்கல் தின ஸ்பெஷலாக இந்த படத்தில் இருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் சூர்யாவுடன் கருணாகரன், ஜெயராம் ஆகியோர் காணப்படுகின்றனர். இப்போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ