spot_imgspot_imgspot_imgspot_img
HomePongal Specialதமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்..... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்….. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்..... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை கோடான கோடி ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினி. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேட்டையன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படமானது 2025 ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் நடிகர் ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். விரைவில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் பண்டிகை காலங்களில் நடிகர் ரஜினியின் வீட்டின் முன்பு பல ரசிகர்கள் ரஜினியிடம் இருந்து வாழ்த்து பெற காத்திருப்பார்கள்.

we-r-hiring

ரஜினியும் வெளியே வந்து கையசைத்து ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார். அதேபோல் தனது சமூக வலைதள பக்கத்திலும் வாழ்த்து தெரிவித்து பதிவுகளை வெளியிடுவார். அந்த வகையில் இன்று (ஜனவரி 14) பொங்கல் நாளில், “உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என்னுடைய இனிய பொங்கல் வாழ்த்துகள்”
என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

MUST READ