spot_imgspot_imgspot_imgspot_img
Homeதிருக்குறள்75 – அரண், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

75 – அரண், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

75 – அரண், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

741. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற
        போற்று பவர்க்கும் பொருள்

கலைஞர் குறல் விளக்கம்பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்.

we-r-hiring

742. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
        காடும் உடைய தரண்

கலைஞர் குறல் விளக்கம்ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்.

743. உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
        அமைவரண் என்றுரைக்கும் நூல்

கலைஞர் குறல் விளக்கம்உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்.

744. சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
        ஊக்கம் அழிப்ப தரண்

கலைஞர் குறல் விளக்கம்உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும்.

745. கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
        நிலைக்கெளிதாம் நீர தரண்

கலைஞர் குறல் விளக்கம்முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரி களுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்.

746. எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும்
        நல்லா ளுடைய தரண்

கலைஞர் குறல் விளக்கம்போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்.

747. முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
        பற்றற் கரிய தரண்

கலைஞர் குறல் விளக்கம்முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்.

748. முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
        பற்றியார் வெல்வ தரண்

கலைஞர் குறல் விளக்கம்முற்றகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து. உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்.

749. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
        வீறெய்தி மாண்ட தரண்

கலைஞர் குறல் விளக்கம்போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளேயிருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்.

  1. எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
    இல்லார்கண் இல்ல தரண்

கலைஞர் குறல் விளக்கம்கோட்டைக்குத் தேவையான எல்லாவிதச் சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது.

MUST READ