சமந்தா திரையுலகில் தனது பயணத்தை தொடங்கி 13 ஆண்டுகளை நிறைவடைந்துள்ளது. இது குறித்து சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருபர் சமந்தா. இவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில் திடீரென சில தினங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை நோயால் சிகிச்சை பெற்று வருவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவுகள் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


உடல் குணமாக சிகிச்சை பெற்று வந்ததால் சில மாதங்களாகவே சினிமாவை விட்டு விலகி இருந்தார். அனால், தற்போது மீண்டும் தனது திரைபயணத்தை தொடங்கியுள்ளார். சமந்தா ”சாகுந்தலம்“ என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படம் 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துவந்த ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பும் தற்போது தொடங்கியுள்ளது.

தற்போது சமந்தா சினிமாவில் நடிக்கத் தொடங்கி 13 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். 2010ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி தமிழில் வெளிவந்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ என்ற படத்தில் நந்தினி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபல மடைந்தார். இதுவே அவரின் முதல் படமாகும். இதையடுத்து அவரது ரசிகர்கள் சமந்தாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


