spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகமல்ஹாசனின் இந்தியன்-2 ஜூன் மாதம் வெளியீடு

கமல்ஹாசனின் இந்தியன்-2 ஜூன் மாதம் வெளியீடு

-

- Advertisement -

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் ஜூன் மாதம் நிறைவடைய உள்ளது என தகவல் வெளிவந்து உள்ளது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து 1996-ல் வெளியான ‘இந்தியன்‘ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

we-r-hiring

இந்த படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பீகார் மற்றும் திருப்பதியில் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் 7 வில்லன்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமுத்திரகனி, பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், சித்தார்த், மாரிமுத்து, கிஷோர், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமில்லாமல் இயக்குநர் ஷங்கர் இதுவரை ஒரே நேரத்தில் 2 படங்கள் இயக்கியதில்லை. தற்போது முதல் முறையாக ஒரே நேரத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2, ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.

இதில் ராம்சரண் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மே மாதம் முடிவடையும் என்றும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் 2 படங்களின் போஸ்ட் புரோடக்க்ஷன் பணிகளும் ஒரே நேரத்தில் நடந்து முடிந்து, முதலில் ராம்சரண் படத்தையும் அடுத்து இந்தியன்-2 படத்தையும் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

Read Also:https://apcnewstamil.com/devotedly-crawled-and-rowed-woman-arrested-apc/

MUST READ