பிரதர் படத்தின் மக்காமிஷி பாடல் வெளியாகி உள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற படங்கள் உருவாகி வருகிறது. அதேசமயம் இவர் பிரதர் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்த படத்தை எம். ராஜேஷ் இயக்க ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைத்திருக்கிறார். விவேகானந்த் சந்தோஷம் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க ஆசிஸ் ஜோசப் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து பூமிக்கா சாவ்லா, சரண்யா பொன்வண்ணன், சீதா, நட்டி நடராஜ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அக்கா – தம்பி உறவை மையமாக வைத்து குடும்பப் பொழுதுபோக்கு படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.
சமீபத்தில் இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதை தொடர்ந்து இந்த படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் மக்காமிஷி எனும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்தப் பாடல் வரிகளை பால் டப்பா எழுதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.