spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்அமெரிக்க தேர்தல்: கமலா ஹாரிஸ்-க்கு ஜனநாயகக் கட்சியினர் ஆதரவு

அமெரிக்க தேர்தல்: கமலா ஹாரிஸ்-க்கு ஜனநாயகக் கட்சியினர் ஆதரவு

-

- Advertisement -

 

அமெரிக்க தேர்தல்: கமலா ஹாரிஸ்-க்கு ஜனநாயகக் கட்சியினர் ஆதரவுதமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் கமலா ஹாரீஸ். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகியதால் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக விரைவில் போட்டியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

we-r-hiring

ஜனநாயக கட்சியில் ஜோ பைடனுக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், நாட்டு மக்கள் மற்றும் கட்சியின் நலன் கருதி ஜோ பைடன் அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து கமலா ஹாரிஸுக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட தனது முழு ஆதரவை வழங்குவதாக ஜோ பைடன் அறிவித்திருக்கிறார்.

அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு – தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா ராஜினாமா!

கமலா ஹாரிஸ் ஜோ பைடனின் ஒப்புதல் மற்றும் கட்சியில் உள்ள பல முக்கிய நபர்களின் வெளிப்படையான ஆதரவை பெற்றுள்ளார். மேலும் அவர் போட்டியின்றி போட்டியிடுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது எனவும் வேறு யாரேனும் கமலா ஹாரீஸ்-க்கு எதிராக போட்டியிட  நின்றாலும் கூட அவரே வலுவான மற்றும் விருப்பமான வேட்பாளராக இருப்பார் என தெரிவிக்கின்றனர்.

MUST READ