spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம்

அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம்

-

- Advertisement -

ஆகஸ்ட் மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யும் பணி துவங்கும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம்

we-r-hiring

தமிழகத்தில் 2,24,13,920 ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழகம் முழுதும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழக அரசு துவக்கியது. இத்திட்டம் துவங்குவதற்கு முன்பாகவே புதிதாக ரேஷன் அட்டை வழங்கும் பணிகளை தமிழக அரசு நிறுத்தியது.

இதனால், புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 2,81,000 பயனாளிகள் காத்திருக்கின்றனர். புதிய ரேஷன் கார்டுகள் மீதான பரிசீலனை நடந்து வந்தது. கடந்த மார்ச் முதல் ஜூன் முதல் வாரம் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், புதிய ரேஷன் கார்டு வழங்க முடியாத நிலை நீடித்தது.

மக்களுக்காகவே உழைக்க தயார் – உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில், அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

MUST READ