இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நானி நடித்து வரும் திரைப்படம் ‘தசரா’. இப்படத்தில் நடித்திருக்கும் இணை நடிகரை நடிகர் நானி அறிமுகப்படுத்தியுள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி. இவர் தமிழில் நடித்த ’நான் ஈ’ படம் மாபெரும் வெற்றி பெற்றது.


இவர் சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘தசரா‘ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும், இப்படத்தில் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் வரும் மார்ச் மாதம் 30ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து.

இந்நிலையில் நடிகர் நானி இப்படத்தில் அவருடன் இணைந்து நடித்திருக்கும் இணை நடிகரின் புகைப்படத்தை வெளியிட்டு அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகர் நானி கையில் ஒரு சிறிய கோழி வைத்திருக்கிறார். இந்த கோழியே அவருடன் இணைந்து படத்தில் நடித்திருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


