spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் பிரபு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

நடிகர் பிரபு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

-

- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது நடிகர் பிரபு நலமுடன் வீடு திரும்பினார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் பிரபு. அன்று முதல் இன்று வரை பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் நடிகர் பிரபு. 90களில் ஹீரோவாகப் புகழ் பெற்ற இவர், தற்போது துணை வேடங்களில் நடித்து இன்றலவு நம்மில் நீங்க இடம் பிடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு மற்றும் பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

we-r-hiring

சமிபத்தில் இவருக்கு, சிறுநீரகத்தில் கற்கள் இருந்ததால் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் லேசர் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிறுநீரகத்தில் கல் அடைப்பு பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்த நடிகர் பிரபு, மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு அதன் பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.

கடந்தாண்டு காத்துவாக்குல ரெண்டு காதல், பொன்னியின் செல்வன், நானே வருவேன், வாரிசு போன்ற வெற்றி படங்களில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ