- Advertisement -
மத்திய அமைச்சரவை செயலாளராக தமிழ்நாட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கேடரின் 1987வது பேட்சை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன், தமிழ்நாட்டில் கலைஞர் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது செயலாளராகவும், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுபபுகளை வகித்துள்ளார்.

தற்போது ஒன்றிய அரசின் நிதித்துறை செயலாளராக பொறுப்பு வகித்த வந்த டி.வி.சோமநாதன், மத்திய அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை மத்திய அரசின் பணி நியமனங்களுக்கான அமைச்சரவை குழு அளித்துள்ளது. அதன்படி, டி.வி.சோமநாதன் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் அடுத்த 2 ஆண்டுகளுக்கு மத்திய அமைச்சரவை செயலாளராக பதவி வகிப்பார்.