spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதேர்தல் ஆணையர்கள் நியமனம் - சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

தேர்தல் ஆணையர்கள் நியமனம் – சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

-

- Advertisement -

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்புக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படுகிறது என்றாலும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் அணையர்களை நியமிக்கும் முழு அதிகாரமும் தற்போது அரசின் வசமே உள்ளது. இந்நிலையில், கொலீஜிய முறையில் நியமிக்க கோரி அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில், “பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின்படி குடியரசுத் தலைவர், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும். அதற்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது.

we-r-hiring

இந்திய தேர்தல் ஆணையம் - உச்சநீதிமன்றம்

இந்நிலையில் உச்சநிதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ச்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பிரதமர் , எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்களை (EC)நியமிக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். தன்னாட்சி அமைப்புகள்’ கொள்ளையடிக்கப்படும்போது, ​​உச்சநீதிமன்றத்தின் இந்த சரியான நேரத்திலான இந்த தலையீடு, இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) சுதந்திரத்தைப் பாதுகாக்கும். அதன் வெளிப்படையான செயல்பாடு ஒரு துடிப்பான ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

MUST READ