சந்திரமுகி 2 படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்ற கங்கனா
சந்திரமுகி 2-ம் பாகத்தின் படப்பிடிப்பில் நடிகை கங்கனா ரணாவத் மீண்டும் கலந்துகொண்டார். அது தொடர்பான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில், பி.வாசு இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகம் கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, கங்கனா ரணாவத் நாயகியாக நடிக்கிறார். வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, பாகுபலி, ஆர்ஆர்ஆர் பட புகழ் எம்.எம் கீரவாணி இசை அமைக்கிறார்.

சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, சந்திரமுகி 2-ம் பாகத்தின் படப்பிடிப்பில் நடிகை கங்கனா ரனாவத் மீண்டும் இணைந்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் போட்டுக் கொள்ளும் புகைப்படங்களையும், அவர் தமது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.