spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனி பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்.... குவியும் வாழ்த்துகள்!

விஜய் ஆண்டனி பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்…. குவியும் வாழ்த்துகள்!

-

- Advertisement -

கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை மேகா ஆகாஷுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.விஜய் ஆண்டனி பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்.... குவியும் வாழ்த்துகள்!

நடிகை மேகா ஆகாஷ் கடந்த 2019 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர். அதைத் தொடர்ந்து இவர் என்னை நோக்கி பாயும் தோட்டா, வந்தா ராஜாவா தான் வருவேன், யாதும் ஊரே யாவரும் கேளிர், சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி என பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். விஜய் ஆண்டனி பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்.... குவியும் வாழ்த்துகள்!கடைசியாக மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 22ஆம் தேதி) நடிகை மேகா ஆகாஷுக்கு சாய் விஷ்ணு என்பவருடன் அருமையான திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது சம்பந்தமான புகைப்படங்களை நடிகை மேகா ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜய் ஆண்டனி பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்.... குவியும் வாழ்த்துகள்!எனவே ரசிகர்களும் திரை பிரபலங்களும் மேகா ஆகாஷுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் மேகா ஆகாஷ் – சாய் விஷ்ணு ஜோடியின் திருமணம் குறித்த தகவல் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ