அதாவது ரத்த வெள்ளை அணுக்களை நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ராணுவ வீரர்கள் என்று சொல்வார்கள்.
இந்த ரத்த வெள்ளை அணுக்கள் தான் நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதாவது பாக்டீரியா, வைரஸ் போன்ற படைவீரர்களை கண்டறிந்து அதை அழிக்கும் ராணுவ வீரர்கள் தான் ரத்த வெள்ளை அணுக்கள் என்று சொல்லப்படுகிறது.
ரத்த வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்ய ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட வேண்டும். அடுத்தது பூண்டு என்பது ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை தூண்டும். எனவே நாம் தினமும் சாப்பிடும் உணவு வகைகளில் அதிகமான பூண்டுகளை சேர்த்துக் கொள்வது நல்லது.

அதேபோல் ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க மாதுளம் பழம், கீரைகள், கேரட், பீட்ரூட், அன்னாசி பழம், முட்டைக்கோஸ், நெல்லிக்காய், மாம்பழம் போன்றவைகளையும் சாப்பிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அடிக்கடி தயிர் சாப்பிடுவதாலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்.
இஞ்சி, மஞ்சள் போன்றவைகளும் ரத்த வெள்ளை அணுக்கள் அதிகரிக்க உதவுகின்றன.
இது தவிர நீங்கள் செய்ய வேண்டியது.
எட்டு மணி நேரம் தூக்கம், தினமும் உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் போன்றவைகளையும் பின்பற்றுவது மிகவும் சிறந்தது.
இருப்பினும் ரத்த வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.


