spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகடப்பாவில் கார் - கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து- 5 பேர் பலி

கடப்பாவில் கார் – கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து- 5 பேர் பலி

-

- Advertisement -

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் காரும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த 5 பேர் காரில் குவ்வலசெருவு நோக்கி சென்று கொண்டிருந்தனர். கடப்பா – ராயசோட்டி மலைப்பாதையில் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் மிது எதிரே வந்த கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் மற்றும் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

we-r-hiring
130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயில்
 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கடப்பா பையனா பள்ளி என்ற இடத்தில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

MUST READ