Homeசெய்திகள்சினிமாநகுல் நடித்த 'வாஸ்கோடகாமா' திரைப்படம் ஓடிடியில் வெளியானது!

நகுல் நடித்த ‘வாஸ்கோடகாமா’ திரைப்படம் ஓடிடியில் வெளியானது!

-

- Advertisement -

நகுல் நடித்த வாஸ்கோடகாமா திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. நகுல் நடித்த 'வாஸ்கோடகாமா' திரைப்படம் ஓடிடியில் வெளியானது!நடிகர் நகுல் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சையமானவர். அதைத் தொடர்ந்து இவர் ஹீரோவாக களம் இறங்கி காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டை போன்ற பல படங்களை நடித்திருந்தார். அடுத்ததாக நகுல் நடிப்பில் தி டார்க் ஹெவன் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் நகுல் வாஸ்கோடகாமா என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நகுலுடன் இணைந்து அர்த்தனா, மன்சூர் அலிகான், கே எஸ் ரவிக்குமார், அனிதா சம்பத், ஆனந்தராஜ், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.  நகுல் நடித்த 'வாஸ்கோடகாமா' திரைப்படம் ஓடிடியில் வெளியானது!இந்த படத்தை 5656 நிறுவனம் தயாரிக்க ஆர் ஜே கிருஷ்ணன் படத்தை இயக்கியிருந்தார். எம்பி அருணின் இசையிலும் சதீஷ்குமாரின் ஒளிப்பதிவிலும் இந்த படம் உருவாகி இருந்தது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி திரையிடப்பட்டது. அடுத்தது இந்த படம் தற்போது அமேசான் பிரைம் மற்றும் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

MUST READ