பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டியூட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இந்திய அளவில் பிரபலமானார். அந்த வகையில் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே ரூ.100 கோடியை தட்டி தூக்கினார். அதைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. எனவே அடுத்தது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘எல்ஐகே’ மற்றும் ‘டியூட்’ ஆகிய படங்களை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இரண்டு படங்களுமே தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் ‘டியூட்‘ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி இப்படத்தின் முதல் பாடல் வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ‘ஊறும் பிளட்’ என்ற தலைப்பில் தமிழிலும், ‘பூம் பூம்’ என்ற தலைப்பில் தெலுங்கிலும் இப்பாடல் வெளியாக இருக்கிறது.

பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தை கீர்த்திஸ்வரன் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. சாய் அபியங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து மமிதா பைஜூ, சரத்குமார், ரோகிணி, ஹிருது ஹருண் ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.