spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' பட ரிலீஸ் எப்போது?.... பக்காவா ஸ்கெட்ச் போடும் படக்குழு!

வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ பட ரிலீஸ் எப்போது?…. பக்காவா ஸ்கெட்ச் போடும் படக்குழு!

-

- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கியுள்ள பார்ட்டி படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' பட ரிலீஸ் எப்போது?.... பக்காவா ஸ்கெட்ச் போடும் படக்குழு!

இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 600028, கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரது இயக்கத்தில் உருவாகி இருந்தால் கோட் திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. எனவே கோட் படத்தை தொடர்ந்து இவரது இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் பார்ட்டி திரைப்படம் வெளியாக இருப்பதாக புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

we-r-hiring

அதாவது வெங்கட் பிரபு இயக்கி இருந்த பார்ட்டி திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே ரிலீஸுக்கு தயாராகி வந்தது. இருப்பினும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' பட ரிலீஸ் எப்போது?.... பக்காவா ஸ்கெட்ச் போடும் படக்குழு!எனவே இந்நிலையில் வருகின்ற டிசம்பர் மாதத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட் படத்தின் வெற்றியை தொடர்ந்து பார்ட்டி படத்தையும் களம் இறக்கினால் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள் என்று படக்குழு பக்காவா ஸ்கெட்ச் போட்டு வருகிறது .

மேலும் பார்ட்டி திரைப்படத்தில் நடிகர் ஜெய், ரெஜினா, ஜெயராம், சத்யராஜ், மிர்ச்சி சிவா, ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், சியாம், சுரேஷ், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அதேசமயம் இந்த படமானது முழுக்க முழுக்க ஃபிஜி தீவில் எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ