spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க செப். 23 வரை கால அவகாசம் நீட்டிப்பு

ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க செப். 23 வரை கால அவகாசம் நீட்டிப்பு

-

- Advertisement -

தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 23ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய ஹஜ் குழுவானது, புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியை வரும் 23ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை  www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாகவோ, அல்லது ‘HAJ SUVIDHA’ என்ற செல்போன் செயலியினை பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம் என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

we-r-hiring

விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 23 அன்று அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்டு குறைந்தது 15.1.2026 வரையில் செல்லத்தக்க இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குழு தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது IFSC குறியீட்டுடன் கூடிய சேமிப்பு வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரி சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

MUST READ