இன்றைய (அக்டோபர் 17) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.தங்கம் விலை இன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இனி வரும் காலங்களில் வெறும் கனவாகத்தான் இருக்கும் என்ற அச்சம் தற்போது நிலவி வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வெளையில், தங்கம் வங்க ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், தற்போதைய சூழலில் தங்கம் விலை குறைவதாக இல்லை. இன்று ஒரே நாளில் தங்கம் 1 கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.12,200க்கும், சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்து சவரன் ரூ.97,600க்கு விற்பனையாகிறது. தங்கத்தை பொறுத்தவரையில் இம்மாதத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.10,480 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை ஏற்றம் தங்கம் வங்கத் திட்டமிட்டிருந்த மக்கள் மற்றும் நகை பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக தங்கத்துடன் போட்டி போட்டுக்கொண்டு அதிகரித்து வந்த வெள்ளியின் விலை இறங்குமுகம் கண்டுள்ளது. நேற்று கிலோவுக்கு ரூ.1000 சரிந்த நிலையில், இன்று கிலோவுக்கு ரூ.3000 குறைந்துள்ளது. இதனால் 1 கிராம் ரூ.203 க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.2,03,000க்குதம் விற்பனையாகிறது. பங்குச்சந்தைகள் ஏற்றம் காரணமாக முதலீட்டாளர்களின் கவனம் அந்தப் பக்கம் திரும்பியதே விலை சரிவுக்கு காரணமாகும்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விமானக் கட்டணங்கள்..!!
