spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதீபாவளி பண்டிகையை ஒட்டி ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விமானக் கட்டணங்கள்..!!

தீபாவளி பண்டிகையை ஒட்டி ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விமானக் கட்டணங்கள்..!!

-

- Advertisement -

தீபாவளியை ஒட்டி பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்படத் தொடங்கியுள்ள நிலையில், பயணிகள் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னை , கோவை , பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் வசிப்பவர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர். அவர்களுக்கு வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவையும் அரசால் இயக்கப்படும். அந்தவகையில் நடப்பாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி சுமார் 20 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகளும் முடிவடைந்த நிலையில், ஆம்னி பேருந்துகள் மற்றும் விமான கட்டணங்கள் விலை உயர்வு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

we-r-hiring

அந்தவகையில் பயணிகள் விமானக் கட்டணம், தீபாவளி பண்டிகையை ஒட்டி பலமடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி,

  • சென்னை – மதுரை சாதாரண நாட்கள் கட்டணம் ரூ.3,129
    இன்றைய கட்டணம் ரூ.17,683 வரை
  • சென்னை – திருச்சி சாதாரண நாள் கட்டணம் ரூ.3,608
    இன்றைய கட்டணம் ரூ.15,233 வரை
  • சென்னை-கோவை சாதாரண நாள் கட்டணம் ரூ.4,351
    இன்றைய கட்டணம் ரூ.17,158 வரை
  • சென்னை – தூத்துக்குடி சாதாரண நாள் கட்டணம் ரூ.3,608
    இன்றைய நாள் கட்டணம் ரூ.17,053 வரை
  • சென்னை – டெல்லி சாதாரண நாள் கட்டணம் ரூ.5,933.
    இன்றைய கட்டணம் ரூ.30,414 வரை
  • சென்னை – மும்பை சாதாரண நாள் கட்டணம் ரூ.3,356.
    இன்றைய கட்டணம் ரூ.21,960. வரை
  • சென்னை-கொல்கத்தா சாதாரண நாள் கட்டணம் ரூ.5,293.
    இன்றைய கட்டணம் ரூ.22,169. வரை
  • சென்னை-ஹைதராபாத் சாதாரண நாள் கட்டணம் ரூ.2,926.
    இன்றைய கட்டணம் ரூ.15,309 வரை.
  • சென்னை- கவுகாத்தி, சாதாரண நாள் கட்டணம் ரூ.6,499.
    இன்றைய கட்டணம் ரூ.21,639 வரை உயர்ந்துள்ளது.

MUST READ