spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை…சென்னை புறநகர் மாவட்டத்திற்கு கூடுதல் வீரர்கள் குவிப்பு…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை…சென்னை புறநகர் மாவட்டத்திற்கு கூடுதல் வீரர்கள் குவிப்பு…

-

- Advertisement -

சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் உள்ள 43 தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலகங்களில் 1000 வீரர்களும், 60 வாகனங்களும் தயார் நிலையில் உள்ளது.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை…சென்னை புறநகர் மாவட்டத்திற்கு கூடுதல் வீரர்கள் குவிப்பு…” தீ விபத்து குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் “வாங்க கற்றுக் கொள்வோம்” என்ற தலைப்பில் பொது மக்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தீயணைப்பு மீட்பு நிலையத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை புறநகர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் மாவட்ட அலுவலர் லோகநாதன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை…சென்னை புறநகர் மாவட்டத்திற்கு கூடுதல் வீரர்கள் குவிப்பு…

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”வடகிழக்கு பருவமழை நெருங்குவதால் சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் உள்ள 43 தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலகங்களில் 1000  வீரர்களும், 60 வாகனங்களும் தயார் நிலையில் உள்ளது.

we-r-hiring

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களுக்கு  27 வாகனங்களும் 350 வீரர்களும் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் பேரிடர் காலங்களில் மாவட்ட வீரர்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை…சென்னை புறநகர் மாவட்டத்திற்கு கூடுதல் வீரர்கள் குவிப்பு…மேலும் தீ விபத்து குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் “வாங்க கற்றுக் கொள்வோம்” என்ற தலைப்பில் பொது மக்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை புறநகர் மாவட்டம்  சார்பில் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 10 முதல் 11 வரை, 12 முதல் 1 மணி வரை, மாலை 4 முதல் 5 மணி வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில் பயிற்சி கொடுக்கப்படுவதாக மாவட்ட அலுவலர் லோகநாதன் தெரிவித்தார்.  ஆர்வமுள்ள விருப்பமுள்ள பொதுமக்கள் அனைவரும் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

ஐயாவுக்கு ஏதாவது ஆச்சின்னா, தொலைத்து விடுவேன்.. யாரையும் சும்மா விடமாட்டேன் – அன்புமணி ..!!

MUST READ