தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாறுமாறாக உயர்ந்த தனியார் பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தால் சொந்த ஊர் செல்லும் மக்கள் மத்தியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார்(ஆம்னி) பேருந்துகளின் டிக்கட் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரை வரை செல்லும் டிக்கட்டுகள் ரூ. 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ள மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பண்டிகை காலங்களில் அரசு மற்றும்ஆம்னி பேருந்துகள் மற்றும் ரயில்களில் டிக்கெட் கிடைப்பதே பெரிய சாவாலாகிவிட்டது. அவசியமான காரணங்களால் பயணம் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மக்கள் எந்த விலைக்கேனும் டிக்கெட் வாங்கி ஊருக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழக்கமான நாட்களை விடப் பண்டிகை காலஙக்ளில் டிக்கெட் கட்டணத்தை பல மடங்காக உயர்த்துவது வழக்கமாகிவிட்டது.
தற்போது, தீபாவளி பண்டிகை நெருங்குவதால், ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டநிலையில் காத்திருப்போர் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது. இதனால், மக்கள் ‘தட்கல்’ டிக்கெட்டுகளுக்காக முயற்சித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் திங்கட்கிழமை, 20-ஆம் தேதி வருவதால், வெள்ளிக்கிழமை அன்று ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று திட்டமிட்டிருந்த மக்கள், டிட்கட் கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளதால் பெரும் அதிர்ச்சியை அடைந்துள்ளனர். மக்களின் இந்த இக்கட்டான சூழ்நிலையை ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
உதாரணமாக சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வழக்கமாக ரூ.800 முதல் 1500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த டிக்கெட்டுகள். தற்போது ரூ.2400 முதல் ரூ.5500 வரை உயர்ந்துள்ளன. இதனால் பலர் முன்பதிவில்லாத பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணங்களை மேற்கொள்ளும் கட்டாயத்தில் உள்ளனர். ஒரு சில மக்கள் கட்டணம் எவ்வளவாக இருந்தாலும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டுய கட்டாயத்தில் வேறு வழியின்றி டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.
ஒரு பயணி இதுகுறித்து கூறியதாவது: தீபாவளி பண்டிகையில் ஒருவராகச் செல்லும் போது கூட விலை மிக அதிகமாக உள்ளது. ஆனால் குடும்பம் முழுவதும் 3 அல்லது 4 பேர் பயணம் செய்தால் மட்டும் ₹10,000 முதல் ₹14,000 வரை செலவாகிறது. சென்று வருவதற்கே ₹20,000–₹30,000 வரை செலவாகிறது. இது பொதுமக்களுக்கு மிகுந்த சுமையாக உள்ளது. அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அரசு நேரடியாக கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட்!