எழும்பூர் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் ரயில்வே போலீஸ் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எழும்பூர் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் பயணிகள் விழிப்புடன் இருக்குமாறும் தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் ரயில்வே போலீஸ் அறிவுறுத்தியுள்ளனா். நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் கூடுதல் பணியாளர்களை நியமித்துள்ளனர். சந்தேக நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் போலீசாருக்கு தகவல் அளிக்க பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சில நேரங்களில் காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளின் நுழைவு தடை செய்யப்படலாம். பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் கொண்டு வரும் உடமைகள் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகின்றன. நூதன முறையில் திருட்டில் ஈடுபடும் கும்பல் ஒன்று சென்னை ரயில் நிலையங்களில் செயல்படுவதாக காவல்துறை எச்சரித்துள்ளது. எனவே, பயணிகளுக்கு விழிப்புணர்வுடன் இருக்குமாறு ரயில்வே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
‘ரெட்ட தல’ படத்தின் கதை இப்படித்தான் இருக்கும்…. இயக்குனர் கொடுத்த அப்டேட்!
