spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'விக்ரம்' படத்தை தொடர்ந்து வில்லனாக களமிறங்கும் சூர்யா!

‘விக்ரம்’ படத்தை தொடர்ந்து வில்லனாக களமிறங்கும் சூர்யா!

-

- Advertisement -

நடிகர் சூர்யா வில்லனாக நடிக்க உள்ளார் என தகவல் கசிந்துள்ளது.'விக்ரம்' படத்தை தொடர்ந்து வில்லனாக களமிறங்கும் சூர்யா!

நடிகர் சூர்யா தற்போது தனது 42வது படமான கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தது சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 43வது திரைப்படத்தில் நடிக்க இருந்த நிலையில் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகி விட்டதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சூர்யா, அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான சர்பிரா திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இவ்வாறு பிஸியான நடிகராக திரைத்துறையில் வலம் வரும் சூர்யா, புதிய படம் ஒன்றில் வில்லனாக நடிக்கப் போகிறார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஏற்கனவே சூர்யா மூன்று வருடங்களில் நடித்திருந்த 24 திரைப்படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருந்தார்.'விக்ரம்' படத்தை தொடர்ந்து வில்லனாக களமிறங்கும் சூர்யா! அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா, ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். இவரது காட்சிகள் சில நிமிடங்களே இடம் பெற்று இருந்தாலும் திரையரங்கையே அதிர வைத்தது. அடுத்தது பாலிவுட்டில் உருவாக இருக்கும் தூம் 4 திரைப்படத்தில் நடிகர் சூர்யா வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

பாலிவுட் பிரபலங்கள் பலர் நடித்து வெற்றி பெற்ற தூம் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இதன் நான்காவது பாகத்தில் நடிகர் சூர்யா வில்லனாக நடிக்க இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ