தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் வீடியோ ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நாயகன் படத்திற்கு பிறகு கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் தக் லைஃப் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் மிகப்பிரமாண்டமாகவும் உருவாகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்து வருகிறது. இதன்படி படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். ஆரம்பத்தில் தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பதாக இருந்தது. அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவரும் படத்திலிருந்து வெளியேற நடிகர் சிம்பு படத்தில் களமிறங்க அவருக்காக மணிரத்னம் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்ததாக சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து புதுடெல்லி, புதுச்சேரி, ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தது.
Shooting Completed #Thuglife enters the next phase#Ulaganayagan #KamalHaasan #SilambarasanTR @ikamalhaasan #ManiRatnam @SilambarasanTR_ @arrahman #Mahendran @bagapath pic.twitter.com/bL7mEpKhXv
— Raaj Kamal Films International (@RKFI) September 24, 2024

சமீபத்தில் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியது. தற்போது அதனை படக்குழுவினர் வீடியோ ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தக் லைஃப் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.